ETV Bharat / state

சமூக வலைதள காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் கோரிய மனு - அக்.14 விசாரணை

சென்னை : சமூக வலைதள காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணை அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தள காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் கோரிய மனு - விசாரணை அக்.14

author img

By

Published : Sep 23, 2020, 7:22 PM IST

சமூக வலைதளங்களில் கந்த சஷ்டி விவகாரம், வனிதா விஜயகுமார் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறிவருதால் சமூக வலைதளங்கள், இணையத் தளங்கள், ஓடிடி தளங்களில் பதிவேற்றப்படும் காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் சுதன் என்பவர் ஜூலை மாதம் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதுபோன்ற சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், வூட், சோனி லைவ், எம்.எக்ஸ். பிளேயர், ஜீ பைவ் ஆகிய ஓடிடி தளங்களிலும், இப் ஹைண்ட்வுய்ட்ஸ், கலாட்டா டாட் காம், சினி உலகம், இந்தியா கிளிட்ஸ் ஆகிய இணைய தளங்களிலும் எவ்வித தணிக்கையும் இல்லாமல் பல்வேறு சர்ச்சைக்குரிய காணொலிகள் பதிவிடப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் சினிமாவை அடிப்படையாக கொண்ட இந்த தளங்களில் பதிவேற்றப்படும் காணொலிகள் எவ்வித தணிக்கையும் இல்லாமல் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் பார்க்கின்றனர்.

திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

காணொலிகளை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் காணொலிகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என கோரியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக நடைபெற்றுவருகிறது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளை, சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், சினிமா இணையதளங்கள் ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்களை எதிர் மனுதாரர்களாக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் இது விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வழக்குரைஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தனி தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கின் மீதான விசாரணை, அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டு ஒத்திவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.