ETV Bharat / state

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு! - Tamil Nadu Legislative Assembly

சென்னை : மருத்துவ இளங்கலை பாடப்பிரிவில் பயில அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த முன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவு!

author img

By

Published : Sep 15, 2020, 6:31 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் நேற்று தொடங்கியது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதற்குத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பல்வேறு அரசு சட்ட முன்வடிவுகள் தாக்கல்செய்யப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒன்றாக, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம் பயில முன்னுரிமை வழங்கும் சட்ட முன்வடிவை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல்செய்தார்.

இந்தச் சட்டதிருத்த முன்வடிவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார்.

இதன்மூலம் பொது மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஹோமியோபதி ஆகியவற்றில் இளங்கலை பயில அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தால் அரசுப் பள்ளியில் படித்த மற்றும் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வில் தகுதிபெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவம் பயில 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.