ETV Bharat / state

எஸ்பிபிக்கு முழு அரசு மரியாதையை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா! - எஸ்பிபி மரணம்

சென்னை : திரையிசை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ் திரையுலகின் சார்பாக இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

எஸ்பிபிக்கு முழு அரசு மரியாதையை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா!

author img

By

Published : Sep 26, 2020, 6:22 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீளா தூக்கத்தில் ஆழ்த்திவிட்டார்

ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் இதுவரை பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000. அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்ற இசை மேதை அவர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் இருந்த மாபெரும் சொத்து அவருடைய மனிதநேயம்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை எந்த இந்தியனும் ஒரு பாடகராக மட்டும் பார்த்ததில்லை. இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிப்பில்லாத சொத்தாகத்தான் பார்த்தார்கள்.

தமிழ் சினிமா உலகிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்களான கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், என்.டி. ராமாராவ், ஜெ.ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றவர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருவரும் விடுத்துள்ள இரங்கல் செய்தி எஸ்.பி.பாலசுப்ரமணியம் எப்படிப்பட்ட உறவினை எல்லா தலைவர்களோடும் வைத்துக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

விலைமதிப்பில்லாத அந்த இசைக் கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும் என்பதை உணர்ந்து, அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கலை உலகின் சார்பில் இசை ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது இந்தியப் பிரதமரும், தமிழ்நாடு முதலமைச்சரும் கலைத் துறையினர் மீது எந்த அளவு அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும்.

அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.