அரியலூர் ரயில்வே நிலையத்தில் உள்ள பொறியாளர் அலுவலகம் முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், லட்சம் தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறிக்கும் நோக்கில் விரைவு ரயில் நிலையம், சரக்கு ரயில் நிலையம் உள்ளிட்டவைகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும்; மேலும் கோவிட் - 19ஐ காரணம்காட்டி ஊதியம் பிடித்தம், டிஏ, பயணப்படியை முடக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.