ETV Bharat / state

பணி நியமனத்திற்காக காத்திருக்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் - கவனிக்குமா அரசு!

author img

By

Published : Aug 19, 2020, 10:17 PM IST

Updated : Aug 20, 2020, 12:27 AM IST

கோவை : நேர்காணல் முடிந்து ஓராண்டாக அரசு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் குறித்து தமிழ்நாடு வனத்துறை கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

வேட்டை தடுப்பு காவலர்கள்
வேட்டை தடுப்பு காவலர்கள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள வனங்களைப் பாதுகாப்பது, வேட்டை கும்பல்களிடம் இருந்து வன விலங்குகளை காப்பது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகளால் மனித - மிருக மோதல் நிகழாமல் தடுப்பது என பல்வேறு சவாலான பணிகளை வேட்டை தடுப்பு காவலர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் இவர்கள் 12,500 ரூபாய் ஒப்பந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால் வேட்டை தடுப்பு காவலர்களின் குடும்பத்தினர் அச்சத்துடன் இருக்கும் சூழல் உள்ளது. பல்வேறு இன்னல்களை சந்திக்கும் வேட்டை தடுப்பு காவலர்கள் பத்து ஆண்டுகள் வரை வனத்துறையில் பணியாற்றினால் வனக்காவலர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றி பத்து ஆண்டுகள் பணி முடிந்த பழங்குடியின இனத்தைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் வனக்காவலர் பணி நியமனம் செய்வது குறித்து பணியாளர்கள்களின் விவரங்கள் கல்வித் தகுதிச் சான்று சாதி சான்று உடற் தகுதி மற்றும் பணி விவரங்கள் குறித்த பட்டியல் சென்னையில் சரி பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வனக்காவலர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் ஓராண்டு கடந்த நிலையில் இதுவரை யாருக்கும் பணி நியமனம் ஆணை வழங்கப்படவில்லை என அறியமுடிகிறது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 23 பேரும், கோவை வனக் கோட்டத்தில் 17 பேரும், தருமபுரியில் இரண்டு பேரும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 15 பேரும், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் எட்டு பேரும், முதுமலை புலிகள் காப்பகத்தில் 37 பேரும், திருநெல்வேலி பகுதியில் மூன்று பேர் என 105 பேர் கடந்த ஆண்டு நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வராததால் பணி நியமன ஆணையை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் 30 விழுக்காடு மலைவாழ் மக்கள் இனத்தவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 15 விழுக்காடு வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வரும் பழங்குடியினருக்கு வழங்குவதென அரசு ஆணை பிறப்பித்த நிலையில் இன்னும் அதற்கான ஆணை வராததால் இதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கரோனா காலம் என்பதால் இதற்கான பணிகள் உடனடியாக செய்ய முடியவில்லை, இவர்களுக்கான பணி நியமன ஆணை விரைவில் வந்து சேரும் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Last Updated : Aug 20, 2020, 12:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.