விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக இரண்டு மருத்துவர்கள் உள்பட 328 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அம்மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,427ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை 983பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1,425 சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.