திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை, அலங்கியம் நால் சாலையைச் சேர்ந்த குருநாதன் (26) என்பவர் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த குருநாதன், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளான். ஆனால் அந்த மாணவி மறுத்துவிட்டதால் தான் வைத்திருந்த கண்ணாடி பாட்டிலால் மாணவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளான். அது மட்டும்மில்லாமல் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.
இவர்கள் இருவரும் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குருநாதனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.