திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் தாராபுரம் பகுதியில் உள்ள அண்ணாமலை ரைஸ் மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் ரைஸ்மில்லில் வேலை பார்த்தபோது எதிர்பாராத விதமாக 30 அடி பாய்லரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மில் நிர்வாகத்தினர் காவல் துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி 30 அடி ஆழத்தில் உள்ள பாய்லரில் இருந்து ஜீவானந்தத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவத்தை தாராபுரம் காவல் துறை ஆய்வாளர் மகேந்திரன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.