ETV Bharat / state

பெண்கள் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாரத்தான் போட்டிகள்!

author img

By

Published : Mar 8, 2020, 5:14 PM IST

திருப்பூர்: மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Womens day Marathon competition
Womens day Marathon competition

உலகெங்கும் இன்று பெண்கள் தினம் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பெண்கள் தினத்தன்று இன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியிலிருந்து வஞ்சிபாளையம் வரை பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

அதேபோல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வீரபாண்டி வரையில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இவ்விரு போட்டிகளையும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடக்கி வைத்தார். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பெண்கள் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மரத்தான் போட்டிகள்!

இந்த மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டிகளின் முடிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமான பெண்கள் தங்கள் முடிகளை தானமாக வழங்கினர்.

இதையும் படிங்க: மகளிர் தினம் - ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.