திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் நல்லூர்ப்பாளையம் பவர்ஹவுஸ் எதிரே உள்ள புதரில் 25 வயதுடைய இளம் பெண் சடலம் ஒன்று தலை சிதைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக, அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் ரமேஷ்கண்ணா தலைமையிலான காவலர்கள், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
![MURDERED WOMEN BY STONE POLICE FAST ENQUIRY இளம்பெண் சடலம் கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4010006_53_4010006_1564661787865.png)
அதைத்தொடர்ந்து, திருப்பூரிலிருந்து கைரேகை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துச் சென்றனர். மேலும், அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
பின்னர், கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.