ETV Bharat / state

பின்னலாடைத் துறையில் சீனாவை விஞ்சுமா இந்தியா? - knitwear industry

”உலக அரங்கில் பின்னலாடை வர்த்தகத்தில் சீனா 39 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் பங்கு 3.8 விழுக்காடாக உள்ளது. ஒருவேளை, சீனாவின் மீதான அவநம்பிக்கை காரணமாக இந்தியாவுக்கு பின்னலாடை ஆர்டர்கள் கிடைத்தாலும் கூட அதை செய்து முடிப்பதற்கான முழு ஆற்றல் நம்மிடம் இல்லை”

thiruppur
thiruppur
author img

By

Published : Jul 3, 2020, 11:28 AM IST

Updated : Jul 4, 2020, 11:43 AM IST

சீனாவில்தான் முதல்முதலாக கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. அங்கிருந்து பயணப்பட்டவர்கள் மூலமாக கரோனா வைரஸும் பிற நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கியது.

அடுத்தடுத்து பெருநகரங்களில் கரோனாவின் தாக்கம் தலை விரித்தாடத் தொடங்கியது. இதையடுத்து அமெரிக்க போன்ற பிற நாடுகள் சீனா முன்கூட்டியே உலக நாடுகளுக்கு கரோனா பாதிப்பு குறித்து தெரிவிக்காமல் இருந்ததாக குற்றஞ்சாட்டின.

இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் வர்த்தகப் பார்வை சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மீது விழும் என பொருளாதார வல்லுநர்களின் கணித்துள்ளனர். குறிப்பாக பின்னலாடைத் துறையில் இந்தியாவின் வர்த்தகம் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன நாட்டின் மீதிருக்கும் வெறுப்பும், அதிருப்தியும் இந்தியாவிற்கு சாதகமாக இருந்தாலும் திடீரென புதையல் போல கிடைக்கும் இந்த வாய்ப்பை கையாள நம்மிடம் போதுமான வசதிகள் உள்ளதா? பின்னலாடைத்துறையினரிடமே பேசினோம்.

திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், “ஒட்டுமொத்தமாக அனைத்து ஆர்டர்கள் இந்தியாவின் வசம் வந்தால் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் குறைவாகவே உள்ளது” என ஒற்றை வரியில் விளக்கிவிட்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “உலக அரங்கில் பின்னலாடை வர்த்தகத்தில் சீனா 39 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்தியா வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே பூர்த்தி செய்துவருகின்றது. சீனாவின் மீது உள்ள அவநம்பிக்கையின் காரணமாக இந்தியாவிற்கு பின்னலாடை ஆர்டர்கள் கிடைக்கும்பட்சத்தில் அதை செய்து முடிப்பதற்காக முழு ஆற்றல் நம்மிடம் இல்லை.

சீனாவிற்கு அடுத்தபடியாக பின்னலாடை வர்த்தகத்தை வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் அங்கு தொழிற்துறையினருக்கு பல்வேறு சலுகைகள், ஏற்றுமதி-இறக்குமதி சலுகைகள் உள்ளதால் அவைப் பெற்றுக்கொண்டதன் மிச்சம்தான் இந்தியாவிற்கு கிடைக்கும்.

பின்னலாடையில் இந்தியா

தற்போது பிரதமர் மோடி ஆத்மநிர்பார் எனும் சுயசார்பு திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இது சுந்திர இந்தியாவிலேயே செயல்படுத்தப்பட்டிருந்தால் தற்போது நாம் சீனாவை தவிர்த்து வரும் ஆர்டகளை எதிர் கொள்ளத் தயாராக இருந்திருப்போம்” என்றார்.

கரோனா வைரஸ் வந்த பிறகு இந்தியா முழுவதும் முகக்கவசம், முழு உடல் கவசம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா பத்து வருடங்களுக்கு முன்பே முகக்கவசம் மற்றும் உடற்கவசங்களை தயாரிப்பதற்கான நவீன இயந்திரங்களை உருவாக்கி, அதனை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியா பின்னலாடை வர்த்தகத்தில் எவ்வளவு பின் தங்கியுள்ளது என விளக்குகிறார் ராஜா சண்முகம். அவர் கூறுகையில், ”சீனாவிற்கும் பின்னலாடை வர்த்தகத்தில் 5 விழுக்காடு இந்தியாவிற்கு வந்தாலும் கூட அதனை நிறைவேற்ற தற்போது நம்மிடம் உள்ளதை விட மூன்று மடங்கு ஆற்றல் தேவைப்படும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் தற்போதைய திருப்பூர் அளவிற்கு 3 திருப்பூர் தேவைப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்தால் நம்மை வலுப்படுத்திக் கொண்டு, இனி வரும் ஆர்டர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்” என்கிறார்.

பின்னலாடை வர்த்தகம் மேம்பட....

இந்தியாவிலேயே 60 விழுக்காடு பின்னலாடை உற்பத்தி திருப்பூரில் மட்டுமே நடைபெறுகிறது. இதை மேம்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும். சுயசார்பு திட்டத்தின் கீழ் முதலில் நம் நாட்டு வர்த்தகத்திலுள்ள குறைகளை கண்டறிந்து அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, குறைகளை மறைத்து கொள்ளக்கூடாது.

இருக்கும் தொழிற்துறைகளை மேம்படுத்தினாலே சீனாவை மிஞ்சும் பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். இதற்கு அரசு வங்கிகள் தொழிற்துறையுடன் இணைந்து முயற்சி மேற்கொள்வதும் அவசியம்” என்றார்.

மேலும், பின்னலாடைத்துறை பல நாடுகளுடன் பின்னி பிணைந்துள்ளது என்னும் துரைசாமி, ”இந்த காலக்கட்டத்தில் நாம் பின்னலாடைத்துறையின் கட்டமைப்புக்களை மேம்படுத்தத் தொடங்கினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவைத் தவிர்த்து இந்தியாவிற்கு வரும் ஒரு விழுக்காடு சதவீத ஆர்டரையாவது நாம் செய்ய முடியும்” என்கிறார்.

தொடர்ந்து ஏற்றுமதியாளர் துரைசாமி பேசுகையில், ”சீனாவிற்கு செல்லக்கூடிய ஆர்டர்கள் இந்தியாவிற்கு வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. முன்னதாக, அமெரிக்கா, சீனா வர்த்தகப் போர் தொடங்கிய காலத்திலேயே இந்தியாவிற்கான வாய்ப்புகள் அதிகளவில் வந்தன. ஆனால் அதனை செயல்முறைப்படுத்தத் தேவையான கட்டமைப்புகள் இங்கே இல்லை. தற்போதும் அதே நிலைதான் நீடித்து வருகிறது.

ஏனெனில் சீனாவின் வேகத்திற்கு நாம் ஈடுகொடுக்கத் தவறிவிட்டோம். அதுதவிர சீனாவில் ஏகப்பட்ட ரகங்களில் துணி உள்ளன. அது போல இந்தியாவில் இல்லை. குறிப்பாக நாம் பல மூலப் பொருள்களுக்கு சீனாவை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவிவருகிறது. இங்கு உள்ள கட்டமைப்புகளை சரி செய்தால் மட்டுமே தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.

இதையும் படிங்க: 'சொற்ப வருமானம் கூட இன்றி உடைந்த சிற்ப கலைஞர்கள்'

Last Updated : Jul 4, 2020, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.