மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருப்பூர் மாவட்ட நொய்யல் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தொடர் மழையையும் வெள்ள அபாய எச்சரிக்கையையும் பயன்படுத்தி சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் சில தனியார் ஆலைகள் கலந்து விடுகின்றன.
இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையுடன் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.