ETV Bharat / state

மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த வார்டு உறுப்பினர்! - மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த வார்டு உறுப்பினர்

திருப்பூர்: 24 மணிநேர மது விற்பனையை கண்டித்து மது பாட்டில்களை மாலையாக அணிந்து ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு வந்த வார்டு உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Tasmak issue news  ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்  Panchayat Union Committee Meeting  Ward member wearing Liquor bottles in Tiruppur  Liquor bottles  மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த வார்டு உறுப்பினர்  வார்டு உறுப்பினர்
Ward member wearing Liquor bottles in Tiruppur
author img

By

Published : Jan 22, 2021, 4:50 PM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதைக் கண்டித்தும், இதனை தடுக்க வலியுறுத்தியும் பல முறை அலுவலர்களிடம், காவல் துறையினரிடமும் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் தேன்மொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், சட்டவிரோதமாக நடைபெற்றுவரும் மது விற்பனையை தடுக்க வலியுறுத்தி மது பாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்த வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன்

இது குறித்து ரவிச்சந்திரன் கூறுகையில், "பல்லடம் பகுதிகளில் 24 மணிநேரமும் மது விற்பனை நடந்து வருகிறது. இது தொடர்பாக அலுவலர்களும், காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் ஒன்றிய குழு கூட்டத்திற்கு மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்தேன். உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 24 மணிநேரமும் மதுபானங்கள் கிடைக்கும்: உச்சத்தில் கள்ளச்சந்தை விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.