தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயங்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சிலிங்கேசுவரர் ஆலயத்தில் சிறப்பு ஸ்ரீ வருண யாகம் இன்று நடைபெற்றது.
கோயில் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேள்வி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தெப்பகுளத்தில் இறங்கி அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து மழைவேண்டி வருண யாகம் நடைபெற்றதை தொடர்ந்து, சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.