ETV Bharat / state

'அக்ஷ்யா கேபிள் நிறுவனம் பற்றிய ஸ்டாலினின் கருத்து பொய்யானது' - thiruppur

திருப்பூர்: தனியார் கேபிள் நிறுவனம் தான் நடத்துவதாக ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அமைச்சரும், அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Aug 11, 2019, 12:46 AM IST

நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நொய்யல் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'அக்ஷயா கேபிள் நிறுவனம் பற்றிய ஸ்டாலினின் கருத்து பொய்யானது'

மேலும் அவர் கூறுகையில், அக்ஷயா என்னும் தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்துவதாக ஸ்டாலின் அறிக்கை குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, தமிழ்நாடு அரசு குறைந்த விலையில் கேபிள் இணைப்பு வழங்கயிருக்கும் சூழ்நிலையில், அதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தனியார் கேபிள் உரிமம் இணையம் மூலம் பெறப்படுவதால், அக்ஷயா கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை அதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் என்றார்.

Intro:தனியார் கேபிள் நிறுவனம் நடத்துவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அமைச்சரும் அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூரில் பேட்டி.

Body:திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார் திருப்பூர் மங்கலம் சாலை மற்றும் கல்லூரி சாலை இணைக்கக் கூடிய அனைத்து பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நொய்யல் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் உடுமலை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மலைவாழ் குடியிருப்பு மக்கள் ஆற்றை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் மேலும் அக்ஷயா என்னும் தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்துவது க ஸ்டாலின் அறிக்கை குறித்து கேட்டதற்கு தமிழக அரசு குறைந்த விலையில் கேபிள் கனெக்சன் வழங்க இருக்கும் சூழ்நிலையில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் தற்போது தனியார் கேபிள் உரிமத்திற்கு இணையம் மூலமாகவே பெறப்படுவதால் அக்ஷயா கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை அதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் அதிமுக ஆட்சி இல்லாத காலத்தில் தமிழகத்தில் கேபிள் யார் கட்டுப்பாட்டில் இருந்தது எந்த அளவு இருந்தது என்பதையும் ஸ்டாலின் நினைத்துப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு அதற்கு பதிலளிக்க விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார் இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.