ETV Bharat / state

மறுமணம் செய்துகாட்டுவேன் என சவால் விட்ட நபர் கொலை - இருவர் கைது

திருப்பூரில் தையல் தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.

தையல் தொழிலாளி கொலை வழக்கு குற்றவாளிகள்
தையல் தொழிலாளி கொலை வழக்கு குற்றவாளிகள்
author img

By

Published : Dec 30, 2020, 5:56 PM IST

Updated : Dec 30, 2020, 8:21 PM IST

திருப்பூர்: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து திருப்பூர் குன்னாங்கால் பாளையத்தில் உள்ள அவரது உறவுக்காரர் சக்திவேல் என்பவருடன் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.28) அம்மாவட்டத்தின் பல்லடம் சாலையிலுள்ள தெற்குபாளையம் பகுதியில் முருகன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முருகனின் உறவுக்காரரான சக்திவேல், விசாரணையின்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த முருகன் சக்திவேலிடம் அவரது உறவுக்கார பெண்ணை தனக்கு மறுமணம் செய்து வைக்கக்கோரி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்த நிலையில், அப்பெண்ணிடம் தவறாக நடந்துகொள்வேன் என முருகன் சவால் விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் அவரது நண்பர் கிருஷ்ண குமார் என்பவருடன் இணைந்து, மதுபோதையிலிருந்த முருகனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அவர் நிலைகுலையவே, அவரை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து உடலை முட்புதரில் வீசிவிட்டு இருவரும் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையுடுத்து சக்திவேல், கிருஷ்ண குமார் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: டிஎன்டி சான்றிதழ் வழங்கக்கோரி செல்ஃபோன் டவர் மீது ஏறி ஆர்ப்பாட்டம்!

Last Updated : Dec 30, 2020, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.