திருப்பூரில் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் சார்பில் மின்னணு மேலாண்மை குறித்த பயிற்சி பட்டறை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். இதில் திடக்கழிவு மேலாண்மை விதிகள், மருத்துவக் கழிவு விதிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள், மின்னணு மேலாண்மை விதிகள், கட்டடம் கழிவுகள் மேலாண்மை விதிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மேலும் பயண்பாட்டிற்கு பின் வீடுகளிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் மின்னணு கழிவுகள் முறையாக சேகரிக்கப்பட்டு மேலாண்மை செய்யாவிட்டால் குரோமியம், பிரோமின், பேரியம், நிக்கல் போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள், நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசுப்படுத்தும் என செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி பட்டறையில் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம், வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம், திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், உதவி இயக்குநர் சுப்பிரமணியம், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உணவு பொருட்களை வாங்குவதில் நுகர்வோருக்கு கவனம் தேவை’