திருப்பத்தூர்: திருநங்கைகளுக்கான பாரம்பரிய உலகளாவிய கூத்தாண்டவர் திருவிழா விழுப்புரம் மாவட்டத்தில் கூவாக்கம் கிராமத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். ஆனால்,கரோனா காரணத்தினால் இந்தாண்டு திருவிழா தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி (43). இவர் திருப்பத்தூர் திருநங்கைகளின் தலைவி. இவரது தலைமையில் அவரது வீட்டின் அருகில் சுமார் 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இணைந்து முகக் கவசங்கள் அணிந்தும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழாவை வீட்டின் முன் நடத்தினர்.
அவ்விழாவில் என்னென்ன நடக்குமோ அதேபோல் கும்மி பாட்டு, கற்பூரம் ஏற்றுதல், தாலியறுத்து அழுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி எளிமையாகக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: தாமிரா என்ற தேவதை..!