ETV Bharat / state

சட்டவிரோதமாக இயங்கிய பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர்: சட்டவிரோதமாக செயல்பட்டதோடு, சாயக் கழிவுகளை சுத்திகரிக்காமல் கால்வாயிலும், நிலத்திலும் வெளியேற்றி வந்த 15 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர்கள் துண்டித்தனர்.

கால்வாயில் வெளியேறும் சாயக்கழிவு
author img

By

Published : May 9, 2019, 3:09 PM IST

திருப்பூர் மாவட்டம், சிறுபூலுவப்பட்டி, அம்மாபாளையம், சாமுண்டிபுரம், தென்னம்பாளையம், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பிரிண்டிங் நிறுவனங்கள் இயங்குவதோடு மட்டுமல்லாமல், சாயக்கழிவுகளையும் வெளியேற்றி வருவதாக பொதுமக்கள் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தனர்.

சட்டவிரோதமாக இயங்கிய வரும் பிரிண்டிங் நிறுவனம்

புகாரின் பேரில் அந்த பகுதிகளுக்கு வந்த அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதில், 15 பிரிண்டிங் நிறுவனங்கள் அனுமதியின்றி இயங்கியதோடு மட்டுமல்லாமல் சுத்திகரிக்காமல் சாயக்கழிவு நீரை வெளியேற்றி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 15 நிறுவனங்களின் மின்இணைப்பை அலுவலர்கள் துண்டித்தனர்.

திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்டதோடு -- சாயக் கழிவுகளை வெளியேற்றி வந்த 15 பிரின்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு  -- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை !!

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி,  அம்மாபாளையம்,  சாமுண்டிபுரம்,  தென்னம்பாளையம்,  ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்படுவதோடு, பிரின்டிங் நிறுவனங்களிலிருந்து சாயக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 15 பிரின்டிங் நிறுவனங்களை கண்டறிந்து அந்நிறுவனங்களின் விபரங்களை,  மாசு கட்டுப்பாட்டு வாரிய சென்னை தலைமை அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமிக்கும் அனுப்பி வைத்திருந்தனர்.
இதனிடையே உரிய அனுமதியின்றி செயல்பட்டதோடு , சாயக் கழிவுகளை அப்பகுதியிலுள்ள நிலத்தடியிலும்,  கால்வாயிலும்,  வெளியேற்றி வந்த 15 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவிட்டார். இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 15 பிரின்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.