ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராகிமின் மகள் பர்வின் பாவி, 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து 2018ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்தார். இவர் நல்லுார் அடுத்த திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (மே 2) பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். பணியை முடித்து மதியம் 2.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய பர்வின் பாவி, இரவு திடீரென வீட்டிலிருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஊராக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.