ETV Bharat / state

கரிசனம் காட்டிய கோடைமழை; தீவிரமாகும் உழவுப்பணி! - Tirupur farmers

திருப்பூர்: அவினாசி, ஊத்துக்குளி மற்றும் மூலனூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரலுடன் கூடிய கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உழவுப்பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி
author img

By

Published : May 18, 2019, 9:26 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைத்தது. தற்போது மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மூலனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

கோடைப்பணிகள் தீவிரம்

இதனால் அந்த பகுதியில் இருந்த சிறு ஒடைகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் கோடை உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வபோது இடையில் சாரல் மழையும் பெய்வதால் உழவு பணிகளை தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோடை மழை – உழவுப்பணிகளில் விவசாயிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி,ஊத்துக்குளி மற்றும் மூலனூர் சுற்று வட்டார பகுதிகளில் கோடை மழை கடந்த சில நாட்களாக சாரல் மழையாக பெய்தது.இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களில் கோடை உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
இன்னிலையில் நேற்று முன் தினம் திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவில் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
இதன் காரணமாக சிறு ஓடைகளில் உள்ள தடுப்பணைகள் பெரும்பாலானவை முழுவதுமாக நிரம்பி தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும் நிலங்களிலும் தண்ணீர் தேங்கியதால் இப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவிவருகிறது.
இந்த மழையினை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு செய்வதன் மூலம் கோடையில் பெய்யும் மழை வீணாகாமல் நிலத்தில் இறங்கும் போது ஓரளவு தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். அதோடு அடுத்து வரும் மாதங்களில் மேற்கொள்ள உள்ள விதைப்பு பணிகளுக்கு நிலத்தை தயார் படுத்தவும் உதவும் என்பதால்  நிலங்களில் உழும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.