கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாடெங்கும் ஜூன் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் தமிழ்நாட்டில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து திருப்பூரில் நேற்று (ஜூன் 1) 197 பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று பயணிகளின் வருகை குறைவாக இருந்த காரணத்தால் இன்று (ஜூன் 2) திருப்பூரில் ஊரகப் பகுதிகளான முதலிபாளையம், சிட்கோ உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் குறைக்கப்பட்டன.
இதனால் அப்பகுதிகளுக்கு வேலைக்குச் செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்த தொழிலாளர்கள், பயணிகள் பேருந்து கிடைக்காததால் அவதி அடைந்தனர். பேருந்துகளில் பயணிகள் இருக்கைகள் நிறைந்த பின்பே, இயக்க இருப்பதாகவும் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.