திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியான அமராவதி வனப்பகுதியில் மர்ம நபர்கள் பத்து பேர் நடமாடியுள்ளனர்.
அவர் அந்த பகுதியில் நடமாடுவதைக் கண்ட அந்த வனப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்களை பற்றி தகவல் தெரிவித்த மக்கள், பார்ப்பதற்கு சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் இருந்ததாக கூறியதையடுத்து, துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு காவல்துறையினருடன் சென்ற வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வனபகுதியில் சுற்றி திரிந்தவர்கள் நக்சல் இயக்கத்தை சார்ந்தவர்களா அல்லது வனத்துறைக்கு தெரியாமல் மலையேறும் பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், வனத்துறையினர் அந்த வனப்பகுதில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.