திருப்பூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் அவிநாசி அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் நிலம் வாங்கியுள்ளார். இந்த இடத்திற்கு மின் இணைப்புக்கோரி கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் இவரை இழுத்தடித்த நிலையில், கடந்த 9ஆம் தேதி இவருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. மேலும் அதற்கான கட்டணத்தை செலுத்தவும் அறிவிப்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து கட்டணத்தை செலுத்திய லோகநாதன், தனது இடத்திற்குச் சென்று பார்த்தபோது மின் இணைப்பு வழங்கப்படாமலும், மீட்டர் பொருத்தப்படாமலும் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் தொடர்பு கொண்டும் முறையான பதில் இல்லாததால், தனது மின் மீட்டரைக் காணவில்லை. அதனைக் கண்டுபிடித்து தரும்படி அவிநாசி காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்துள்ளார்.
வடிவேலு பாணியில் மின் இணைப்பைக் காணவில்லை என இளைஞர் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: மதுவில் விஷம் கொடுத்து லாரி ஓட்டுநரை கொன்ற நண்பன்!