திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு அம்மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது முதற்கட்ட கரோனா பாதிப்பு இருக்கிறவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல்சிகிச்சை தேவைப்படுகிறவர்கள் மட்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று சிகிச்சை பலன் இன்றி பலியாகினர்.
இதனால் மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 ஆண்கள், 5 பெண்கள் அடங்குவர். மேலும் மாவட்டத்தில் இன்று செவிலியர் ஒருவர் உள்பட 27 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு கரோனா உறுதி