திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 18ஆம் தேதி, காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் மண்டலத்தில், தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில், 11.28 ஹெக்டேர் பரப்பளவில், 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கல்லூரி கட்டடம் அமைக்கப்படுவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிக்காக மத்திய அரசு சார்பில் 195 கோடியும், தமிழ்நாடு அரசு சார்பில் 141 கோடியே 96 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:336 கோடியில் திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்!