திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக நேற்று காலை நான்காம் கட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டபோது பிஏபி வாய்க்காலில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தண்ணீர் வராமல் போனது. சென்ற மாதம் 15ஆம் தேதி காண்டூர் கண்மாயில் சீரமைக்கும் பணி நடைபெற்றதால் கேரளாவில் இருந்துவந்த தண்ணீரும் தாமதமானது.
இதேபோல் திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் கட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டபோதும், அப்பகுதியின் கால்வாய் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணி முடிவடையாததால், தண்ணீர் சென்றடையவில்லை, குறிப்பாக இது விவசாயிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி