திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு திருச்சியிலிருந்து பனியன் துணிகளை ஏற்றி வந்த லாரி காங்கேயம் சாலை வழியாக திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது, நல்லூர் அருகே வந்த லாரி நிலை தடுமாறி மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த பகுதியில் உள்ள சில கடைகளின் மீது லாரி மோதியதில் அக்கடைகளின் முன்பக்கம் சேதமடைந்ததுடன், அங்கு சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
மேலும் லாரி மோதி மின்கம்பம் வளைந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவம் இடம் விரைந்து கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தியதோடு, விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விசைப்படகுகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து!