ETV Bharat / state

திருப்பூர் பின்னலாடை முன்னேற்றத்திற்கு மத்திய பட்ஜெட்டில் வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?

author img

By

Published : Jan 29, 2020, 10:59 AM IST

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை துறைக்கென ஒரு ஆராய்ச்சிக் கூடம் அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க மத்திய அரசிடம் அதன் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

tirupur banian work development, their employees requests central govt in upcoming budget
திருப்பூர் பின்னலாடை முன்னேற்றத்திற்கு மத்திய பட்ஜெட்டில் வைக்கப்படும் கோரிக்கை!

மத்திய அரசு 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) பிப். 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே மத்திய நிதிநிலை அறிக்கையில், திருப்பூருக்குத் தேவையான திட்டங்கள், குறிப்பாக திருப்பூர் தொழில் துறையினர் விடுத்துள்ள கோரிக்கைகள், அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தொழில் துறையினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

திருப்பூர், இந்தப் பெயரைக் கேட்டாலே ஞாபகத்திற்கு வருவது பனியனாகத்தான் இருக்க முடியும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவையும் கடந்து உலகளவில் திருப்பூர் பனியன் மிகப் பிரபலம். இந்தியாவில் ஏற்றுமதி ஆகக்கூடிய மொத்த பின்னலாடைகளில் 55 விழுக்காடு பின்னலாடைகள் திருப்பூரிலேயே உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2017ஆம் ஆண்டு 27 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் 2018ஆம் ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்தது. எனவே, தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தொழில் துறையினர் விடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நீடித்துவருகிறது.

அதேபோல் திருப்பூரில் பின்னலாடை அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய காரணத்தினால் திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு பின்னலாடை துறைக்கென ஒரு சிறப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் அதன் வாயிலாக பின்னர் ஆடைத்துறையில் ஏற்படக்கூடிய இடர்பாடுகளை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்யலாம் என்றும் தொழில் துறையினர் கூறுகின்றனர்.

திருப்பூர் பின்னலாடை ஆலைகள்

அதேபோல் தொழிலாளர்கள் பின்னலாடை துறையின் முக்கியமாகக் கருதப்படுவதால் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பெருகிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களது இருப்பிட வசதிகள் ஆகியவை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு, மருத்துவமனை உள்ளிட்டவற்றை அமைத்துத்தர வேண்டும். வங்கிக் கடன்களைத் தொழில் துறைக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர, ஒரு அமைப்பை உருவாக்குவதோடு, ஒரு பிரத்யேக ஆராய்ச்சிக் கூடம் அமைத்துத்தர வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளும் எழுப்பப்படுகின்றன.

மேலும் கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது. ஏனென்றால் சரக்குகளை பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களுக்குச் கொண்டுசென்று அனுப்புவதற்குப் பதிலாக கோவையிலிருந்து சரக்குகளை அனுப்ப முடியும். இதனால் கால விரயமும் தவிர்க்கப்படும். போக்குவரத்துச் செலவும் மிச்சப்படுத்தப்படும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் எதிர்பார்ப்பதாகத் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க: பனியன் தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை, கொலையாளி யார்? - விசாரணையில் காவல் துறை!

Intro:மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு 2020_21ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் 1ம் தேதி சனிக்கிழமை தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே மத்திய பட்ஜெட்டில் திருப்பூருக்கு தேவையான திட்டங்கள் குறிப்பாக திருப்பூர் தொழில் துறையினர் விடுத்துள்ள கோரிக்கைகள் அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தொழில் துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Body:திருப்பூர் இந்த பெயரை கேட்டாலே உடனுக்குடன் ஞாபகத்திற்கு வருவது பனியன் பொருளாகத்தான் இருக்க முடியும் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையும் கடந்து உலக அரங்கில் திருப்பூர் பனியன் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது இந்தியாவில் ஏற்றுமதி ஆகக்கூடிய மொத்த பின்னலாடைகள் 55 விழுக்காடு பின்னலாடைகள் திருப்பூரிலேயே உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது கடந்த 2017 ஆம் ஆண்டு 27 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் 2018ம் ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையினர் விடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது அதே போல் திருப்பூரில் பின்னலாடை அதிக அளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய காரணத்தினால் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பின்னலாடை துறைக்கு என ஒரு சிறப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் அதன் வாயிலாக பின்னர் ஆடைத்துறையில் ஏற்படக்கூடிய இடர்பாடுகளை உடனடியாக கண்டறிந்து சரிசெய்து ஏற்றுமதியை மென்மேலும் ஊக்கப் படுத்த இயலும் அதேபோல் தொழிலாளர்கள் பின்னலாடை துறையின் முக்கியமாக கருதப் படுவதால் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பெருகிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது இருப்பிட வசதிகளை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் இயற்கை மருத்துவமனை உள்ளிட்டவற்றை அமைத்து தரவேண்டும் வங்கி கடன்களை தொழில்துறைக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பூரில் தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவர அமைப்பை உருவாக்கவேண்டும் கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் மேலும் சரக்கு விமானங்கள் வந்து செல்ல வழிவகை செய்து தர வேண்டும் இதன் மூலம் சரக்குகளை பெங்களூர் சென்னை கொண்டு சென்று அனுப்புவதற்கு பதிலாக கோவையிலிருந்து சரக்குகளை கையாள முடியும் இதன் மூலம் கால விரயமும் தவிர்க்கப்படும் போக்குவரத்து செலவு மிச்சப்படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளோம் வரும் பட்ஜெட்டில் தொழில்துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்

பேட்டி: ராஜா சண்முகம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.