தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1998ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்கிட வேண்டும், 2008-க்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிரந்தர பணி நியமனம் வழங்காதது ஏன் - மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு கேள்வி!