ETV Bharat / state

ஊரடங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் 45ஆக பதிவு!

author img

By

Published : Jun 6, 2020, 2:27 AM IST

திருப்பூர்: கரோனா ஊரடங்கில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பிரிவின் கீழ் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

tirupur 45 women violence cases booked says 181 servicing centre for women
ஊரடங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் 45ஆக பதிவு!

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அரசு மருத்துவமனையில் 181 என்ற பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தினை அம்மாவட்ட ஆட்சியர் மருத்துவர் விஜயகார்த்திகேயன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

tirupur 45 women violence cases booked says 181 servicing centre for women
ஆட்சியர் மவிஜயகார்த்திகேயன் குத்துவிளக்கு ஏற்றினார்

இந்தச் சேவை மையத்தில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை, மனரீதியான பிரச்னைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்காக இந்த ஒருமித்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட தொடங்கிய இந்த மையத்தில் இதுவரை 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறை காரணமாக பெண்களுக்கு எதிராக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

181 பெண்கள் சேவை மையம்

மேலும் பாதிக்கப்பட்டவர்களை அணுகி அவர்களுக்கு மனரீதியான ஆலோசனைகள், சட்டரீதியாகவும் அறிவுரை வழங்கி தீர்வு காணப்பட்டு வந்தது. தொடர்ந்து ஊரடங்கு காலகட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோரை மீட்டு இரண்டு தற்காலிக முகாம்கள் அமைத்து அவர்களுக்கு உணவு, இருப்பிடம் கொடுத்து பராமரித்து வந்துள்ளதாக சமூக நல அலுவலர் அம்பிகா தெரிவித்துள்லார்.

தற்போது அவர்களில் சிலர் தங்களது சொந்த ஊருகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டும், முதியோர் இல்லம், மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பிகா தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருப்பூர் அரசு மருத்துவமனை தலமை மருத்துவர் வள்ளி சத்தியமூர்த்தி, அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'பசியால் உயிரிழந்து விடுவோம்' - வேதனையில் மீனவப் பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.