கடந்த மாதம் டெல்லியில் சமய மாநாடு நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தங்கள் மாநிலத்திற்குச் சென்றனர்.
அதில் கலந்து கொண்டு வந்தவர்களுக்கு பெரும்பாலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் டெல்லி சென்று வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 14 நாட்களாக தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த 21 பேருக்கு இரண்டு முறை பரிசோதனை மேற்கொண்டதில், அவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 21 பேரையும் மருத்துவர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டிலும் 14 நாட்கள் அவர்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .
இதையும் படிங்க: கரோனா - ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று 21 பேர் வீடு திரும்பினர்!