நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. மக்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், வங்கிகளில் இஎம்ஐ கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி காலக்கெடு வழங்கியுள்ளது. ஆனால், திருப்பூர் - அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ தொகையை கட்டுமாறு குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளது. அது தவிர, வங்கிகளில் போதுமான இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு இஎம்ஐ கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளது.
இதுபோன்ற அழைப்புகளினால் மன அழுத்தத்திற்குள்ளான திருப்பூர் மக்கள், பஜாஜ் நிறுவனத்தை முற்றுகையிட்டு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வட்டிக் குறைப்பு, இ.எம்.ஐ. செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் - ரிசர்வ் வங்கி