திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தையில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட் பகுதியை இடித்து புதிய கடைகள் கட்டப் போவதாக அறிவித்திருந்தது.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனிடையே, இன்று ஜேசிபி இயந்திரங்களுடன் கடைகளை இடிப்பதற்காக வந்த அலுவலர்களை மார்க்கெட் பகுதிக்குள் விடாமல் வியாபாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் வியாபாரிகள், அலுவலர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்காலிகமாகச் சந்தையை இடிக்கும் பணியைக் கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:காய்கறி சந்தையை இடிப்பதற்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்!