தமிழ்நாட்டில் உருவான புதிய மாவட்டங்களில் 35ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்பு ஓராண்டு கால இடைவெளியில் அனைத்து துறைச் சார்ந்த அலுவலகங்களுக்கும் இடங்களை தேர்வு செய்து கட்டடங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக புதிய கட்டிடம் சுமார் 5.54 ஏக்கர் பரப்பளவில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பத்தூர் - திருவண்ணாமலை செல்லும் சாலையில் இருந்த கூடுதல் சந்தனக் கிடங்கில் அமைய உள்ளது.
![திருப்பத்தூர் புதிய எஸ்பி அலுவலகம் திருப்பத்தூர் புதிய எஸ்.பி அலுவலக அடிக்கல் நாட்டு விழா எஸ்.பி அலுவலக அடிக்கல் நாட்டு விழா New SP Office, Tirupattur Tirupattur New SP Office Foundation Day Ceremony New SP Office,](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-01-thirupathur-sp-office-building-work-start-vis-scr-pic-tn10018_17022021151014_1702f_1613554814_267.jpg)
இந்த புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று (பிப்.18) நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், காவலர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நாகையில் 31,000 கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்திற்கு மோடி அடிக்கல்!