திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்துள்ள கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பகவான் நந்து என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரை, நேற்றிரவு ஆறு பேர் ஒன்று கூடி அரிவாளால் தாக்கியதாகவும் அதனால் கை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயமடைந்துள்ளதாகவும் கூறி திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பின்னர் பகவான் மீது சந்தேகம் வர, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சுய விளம்பரத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் தனது ஒட்டுநரை வைத்து உடலில் கிழித்துக்கொண்டதாகவும் பின்னர் தனது கைகளைத் தானே காயப்படுத்திக்கொண்டு மற்ற மதத்தினர் தன்னை அரிவாளால் வெட்ட முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு சமூக அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: வடமாநில பெண்னை கொலை செய்த சிறுவன் போலீஸில் ஒப்படைப்பு.!