திருப்பூர் காங்கேயம் சாலை சிவன்நகர் பகுதியை சேர்ந்த மனோகரன். இவர் ரியல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 2012ம் ஆண்டு ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான அவிநாசியில் உள்ள 120 சென்ட் நிலத்தை கிரையம் செய்துள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 2016ல் மனோகரன் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்த ரங்கசாமி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதுதொடர்பாக, திருப்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனோகரன் புகார் அளித்துள்ளார். அதில், தாம் திமுக பிரமுகர் என்றும், நிலமோசடி செய்து விட்டதாகவும் ரங்கசாமியின் மகன் பிரசாந்த் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையும் படிங்க: கமல்ஹசானை கோயம்புத்தூரில் போட்டியிட கேட்டுக்கொண்டோம் - மகேந்திரன்