திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்த கர்நாடக மாநிலத்தின் தக்ஷின கன்னடா முன்னாள் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்திற்கு பின்னர் சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்டவை மிகவும் மோசமான மக்கள் விரோத சட்டங்கள். அவை பாசிசத்தின் கிரீடங்கள், அவற்றை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அரசு அறிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: நாகை, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணி