திருப்பூர்: உடுமலை தீபாலபட்டியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (37) கரட்டுமடம் அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் அப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச பதிவுகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் இந்த தகவல் திருப்பூர் சைல்டு லைன் எண்ணுக்குக் கிடைத்துள்ளது. உடனே அவர்கள் உடுமலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அலுவலர்கள் நடத்திய நேரடி விசாரணையின் போது, அசோக் குமாரின் மொபைல் போனிலிருந்து மாணவிக்கு, பல்வேறு ஆபாச பதிவுகள் அனுப்பட்டிருந்தது உறுதியானது. இதையடுத்து ஆசிரியர் அசோக் குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: உ.பி.யில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!