உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வருவதால் எல்லையோரப் பகுதிகளில் பலத்த சோதனைக்கு பிறகே தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள் மூடப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அந்த தகவலை முழுமையாக கவனிக்காத சில குடி மகன்கள், இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடி விடுவார்கள் என நினைத்து, நேற்று இரவு திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கூடுதலாக மதுவை வாங்கி சென்றனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குடிமகன்கள் ஒரு நபருக்கு ஒன்று அல்லது இரண்டு கொடுங்கள், நாங்கள் நீண்ட நேரமாக காத்து கிடக்கின்றோம் என கூச்சலிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதன்பின் பொறுமையை இழந்த குடிமகன்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு முட்டிமோதி கடைக்குள் புகுந்ததால், டாஸ்மாக் கடைகள் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் அறிகுறியுடன் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி!