திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குழந்தைபாளையம் பகுதியில் வசித்துவரும் சம்பத் குமார் என்பவருக்கு சொந்தமாக குண்டடம் ஒன்றியம் மானூர்பாளையத்தில் 4.40 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பவர் கிரிப் ஆஃப் இந்தியா நிறுவனம், புகளூரிலிருந்து திருச்சூர்வரை செல்லும் 320/கே.வி உயர்மின் கோபுரப் பாதை அமைக்க அளவீடு செய்துள்ளது.
இதுகுறித்து சம்பத்குமார் கூறுகையில், "நிலத்தின் மொத்த நீளம் சுமார் 800 அடி, அந்த 800 அடிக்கும் நிலத்தின் நடுவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. அப்படி அமைந்தால் நிலத்தை எதற்கும் பயன்படுத்த முடியாது. அதனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி, எனது நிலத்திற்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், மனநலம் குன்றிய எனது மகனுடைய எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தற்போது அவர், இழப்பீடு வழங்கும் வரை துரத்திமரத் தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுடன் உயர் மின்னழுத்த கோபுர கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் ஈசன், கொள்கைபரப்புச் செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் முத்து விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 266 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு