ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2020: திருப்பூர் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா? - Will the people of Tirupur meet their expectations

திருப்பூர்: தமிழ்நாடு அரசு சார்பில் 2020 - 21ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

tamil-nadu-budget-2020
tamil-nadu-budget-2020
author img

By

Published : Feb 12, 2020, 6:27 PM IST

திருப்பூர் என்றாலே அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது பனியன் தொழில்தான். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையும் கடந்து உலக அரங்கில் திருப்பூர் பனியன்கள் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவில் ஏற்றுமதி ஆகக்கூடிய மொத்த பின்னலாடைகளில், 55 சதவிகித பின்னலாடைகள் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி ஆகுகின்றது.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஜிஎஸ்டியால் திருப்பூர் பின்னலாடை சரிவை சந்தித்து வந்துள்ளது. இதனிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில், திருப்பூர் தொழில் துறையை பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்வதற்கான அறிவிப்பு ஏதும் இல்லாதது தொழில் துறையினர் இடையே ஏமாற்றத்தை அளித்திருந்தது.

இதனையடுத்து, தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் திருப்பூர் தொழில் துறையில் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குறிப்பாக தொழிலாளர்களுக்கு என தனி குடியிருப்பு உருவாக்கித் தர வேண்டும், தொழிலாளர்களின் நலன் கருதி இஎஸ்ஐ மருத்துவமனையை உடனடியாக கட்ட ஏற்பாடுகள் செய்யவேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.

இதுதவிர விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், பின்னலாடை துறையில் இணை உற்பத்தியாளர்கள் ஆக உள்ள பனியன் நிறுவனங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பனியன் உற்பத்தி ஆலை

மேலும் இதுபோல் தொழிலாளர்களின் நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வருகிற மாநில பட்ஜெட்டை எதிர்பார்த்து திருப்பூர் தொழிலாளர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மானியம் இல்லாத சிலிண்டர் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் கவலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.