ETV Bharat / state

தகுந்த இடைவெளி இல்லை: கடைகளுக்கு சீல்

author img

By

Published : May 18, 2020, 1:20 PM IST

திருப்பூர்: தாராபுரத்தில் தகுந்த இடைவெளியினை பின்பற்றாத கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து வட்டாட்சியர் தலைமையில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

social distancing
shops sealed in dharapuram

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி மே-10ஆம் தேதி முதல் பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் பார்சல் விற்பனை மட்டும் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தாராபுரம் நகரில் பேக்கரிகள், ஹோட்டல்களில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

shops sealed in dharapuram
வட்டாட்சியர் தலைமையில் கடைகளுக்கு சீல்

இதையடுத்து தாராபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் தகுந்த இடைவெளியை பின்பற்றாத கடைகள் மீது வழக்குப்பதிவு செய்து வட்டாட்சியர் தலைமையில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் 10க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் மீது தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்காக அரசுப் பேருந்துகள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.