திருப்பத்தூர் : ஆம்பூர் அடுத்த சின்ன கொம்மேஸ்வரம் பகுதி தொழிற்சாலையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைதொகை மற்றும் போனஸ் தொகை உள்ளிட்டவற்றை தொழிற்சாலை நிர்வாகம் தேதி குறிப்பிடாமல் காசோலையாக (செக்) வழங்கியுள்ளது.
ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை நிர்வாகம் வழங்கிய அந்த காசோலையை தொழிலாளர்கள் வங்கியில் மாற்ற முயன்ற போது, பணம் இல்லாமல் பலமுறை திரும்பியுள்ளது.
இதனால், அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள், உரிமையாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ்க்கு முக்கிய பதவி?