திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேவூரில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து சாந்தி லட்சுமி தலைமையிலான பறக்கும் படையினர் பந்தம் பாளையம் பகுதியில் உள்ள முருகேசன் என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 2051 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அவற்றைப் பறிமுதல்செய்த பறக்கும் படையினர் மதுபாட்டில்களை சேவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சேவூர் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வீட்டிலிருந்த முருகேசன் (57) ஐயப்பன் (35) இருவரையும் கைதுசெய்தனர்.
பறிமுதல்செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் - ராணுவ வீரர்கள் செய்தது என்ன?