திருப்பூர் மாவட்டம் யூனியன் மில் சாலையில் உள்ள 1963 எண் டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்த வாந்த சிலர், வெளியே இருந்து தண்ணீர் வாங்கிவந்து மது அருந்தியுள்ளனர். பாரில் வெளியிலிருந்து எவ்வித உணவுப் பொருள்களும் வாங்கி வரக்கூடாது எனவும் இங்கு விற்கும் பொருட்களை மட்டுமே வாங்கி வந்து மது அருந்த வேண்டும் எனவும் சிலர் கூறியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில் மது அருந்த வந்த நபரை கடை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் உடனடியாக சென்று 20க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து பார் ஊழியர்களை தாக்கியுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற மற்றொரு நபரை இரு தரப்பினரும் மோசமாகத் தாக்கியுள்ளனர். மதுபானக் கடையின் ஷட்டரையும் இழுத்து மூடி தகராறில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து அங்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.