திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(50). இவர் வடுகபாளையம் சமத்துவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விசாலாட்சி, அவிநாசியை அடுத்து ஆலத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டின் மாடியில் குழாய் அடைத்திருப்பதை சுத்தம் செய்துகொண்டிருந்த லோகநாதன், முதல் மாடியிலிருந்து குப்பையை கீழே கொட்ட முயற்சித்துள்ளார். அப்போது, நிலை தடுமாரி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார், லோகநாதன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதைக் கொண்டு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.