திருப்பூரில் பணிபுரியும் லட்சகணக்கான பனியன் தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அனைத்து சங்கங்களின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை முதலாளி சங்கங்களிடம் கொடுத்த நிலையில், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தற்போது உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பனியன் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழ்நிலையில், பனியன் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான சம்பள உயர்வு வழங்கக்கோரியும், முதலாளி சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் கோரியும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: