ETV Bharat / state

மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர்: இரவு நேரங்களில் தொடர்ந்து  மின் தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்
author img

By

Published : May 15, 2019, 11:56 AM IST

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக இரவு நேரங்களில் மின் தடை செய்யப்பட்டு, காலையில் மீண்டும் விநியோகிக்கப்படுகிறது. இதனால் வேலைக்குச் சென்றுவருவோரின் தூக்கம் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளை இருட்டில் வைத்துக்கொண்டு பெண்கள் அச்சத்துடன் வசித்துவருகின்றனர்.

மேலும், திருப்பூரின் மற்ற பகுதிகளில் மின் விநியோகம் சீராக உள்ள நிலையில், பாரப்பாளையம் பகுதியில் மட்டும் மின் தடை செய்யப்படுவதாகவும், இரவு நேரத்தில் மின்சாரத்தை முறையாக விநியோகிக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் திருப்பூர் - மங்கலம் சாலையில் நள்ளிரவு 1 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் தடையை கண்டித்து சாலை மறியல்

இதனையடுத்து, பொதுமக்களின் சாலை மறியல் குறித்த தகவலறிந்த திருப்பூர் மத்திய காவல்நிலைய காவல் துறையினர், மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி மின்விநியோகம் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

திருப்பூர் பாரப்பாளையத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து  மின் தடை செய்யப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மங்கலம்சாலை பாரப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக இரவு நேரத்தில் செய்யப்படும் மின் தடை காலையிலேயே மீண்டும் விநியோகிக்கப்படுவதாகவும், இரவு நேரத்தில் குழந்தைகளை இருட்டில் வைத்துக் கொண்டு அச்சத்துடன் வசித்து வருவதாகவும் திருப்பூரின் மற்ற பகுதிகளில் மின் விநியோகம் சீராக உள்ள நிலையில் பாரப்பாளையம் பகுதியில் மட்டும் மின் தடை செய்யப்படுவதாகவும் இரவு நேரத்தில் மின்சாரத்தை முறையாக விநியோகிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் திருப்பூர் - மங்கலம் சாலையில் நேற்று இரவு 1மணி அளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் மத்திய காவல்நிலைய போலிசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மின்விநியோகம் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.