விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில், உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேறப்பட்ட விவசாயிகள் கணியூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் காளிமுத்து கலந்துகொண்டார். விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதை தவிர்த்துவிட்டு கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும். அனைத்து விவசாய சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். ஏற்கனவே உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் சென்றுகொண்டிருக்கும் இடங்களுக்கு மாத வாடகை வழங்க வேண்டும். மேலும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பலனளிக்காததால் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையும் படிங்க: